LATEST NEWS
நடிகர் அஜித் நடித்து படுதோல்வியை தழுவிய 10 படங்கள் என்னென்ன தெரியுமா?…. முழு லிஸ்ட்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் திரையுலகில் அதிக தோல்விகளை சந்தித்த ஒரே நடிகர் என்றால் அது அஜித் தான். இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அந்த அளவிற்கு தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது முன்னணி நடிகராக திகழும் இவரின் நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த 10 படங்கள் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
1. வரலாறு:
அஜித் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் வரலாறு. இந்த திரைப்படம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
2. அசல்:
அஜித் நடித்த இரட்டை வேட்டை திரைப்படங்களில் தோல்வி அடைந்த முதல் திரைப்படம் தான் அசல். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக படு தோல்வியை தழுவியது.
3. ஜனா:
இந்தத் திரைப்படம் அஜித்தின் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சரித்தது. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
4.ஏகன்:
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித், நயன்தாரா, நாசர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.
5. ஜி:
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்திய தமிழ்மொழி அரசியலில் அதிரடி திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இதில் அஜித் மட்டும் திரிஷா நடித்தனர். ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.
6. ராஜா:
கழுதை 22 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை எழில் இயக்கி இருந்த நிலையில் கதாநாயகனாக அஜித்தும் கதாநாயகியாக ஜோதிகாவும் மற்றொரு கதாநாயகியாக பிரியங்கா திரிவேதியும் நடித்தனர். இந்த திரைப்படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்டிருந்தாலும் அதிக பட்ஜெட்டில் உருவாகி பெரும் தோல்வியை தழுவியது.
7. திருப்பதி:
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி திரைப்படத்தை பேரரசு எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித், அருண் பாண்டியன் மற்றும் சதா ஆகியோர் நடித்துள்ளனர். ரியல் கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
8. பில்லா 2:
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா 2. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்த ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டு கொள்ளைக்காரனாக மாறினார் என்பதை இப்படத்தின் கதை. ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
9. பரமசிவன்:
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பி வாசு இயக்கத்தில் வெளியானது. இதில் அஜித், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ் மற்றும் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சரியாக பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தோல்வியை சந்தித்தது.
10. ஆழ்வார்:
கடந்த 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாகவும் அசின் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் காதல் மற்றும் ஆக்சன் நிறைந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
