LATEST NEWS
ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் தெரியுமா?…. உண்மையை கூறிய பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.
இதனிடையே சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பல சர்ச்சை தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதில் ரோபோ சங்கரை மிமிக்ரி கலைஞராக இருக்கும்போதே என்னுடன் நல்ல பழக்கம்.
இவர் எப்போதும் உடற்பயிற்சி மற்றும் டயட் என தனது உடம்பை அழகாக வைத்திருப்பார். அதன் பிறகு நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய நிலையில் காலப்போக்கில் அதற்கு அடிமையாகி விட்டார். இந்த பழக்கத்தினால் இவர் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு உள்ளார்.
அதே சமயம் இவருக்கு மஞ்சள் காமாலை நோயும் வந்துள்ளது. இவரை தற்போது பார்க்கும்போது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர இதனை பார்த்த பலரும் இதுதான் காரணமா என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
