தமிழ் சினிமா நடிகர்களின் பூர்வீக ஊர் எது தெரியுமா?…. இதோ ஓர் சிறப்பு தொகுப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா நடிகர்களின் பூர்வீக ஊர் எது தெரியுமா?…. இதோ ஓர் சிறப்பு தொகுப்பு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக வெளியானது.

அடுத்ததாக அஜித் தனது 62 ஆவது திரைப்படத்திலும் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்கி விட்டனர். அதனைப் போலவே ரஜினியும் நெல்சன் இயக்கத்தில் ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்கையில் தமிழ் சினிமா நடிகர்களின் பூர்வீக ஊர் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கமல்ஹாசன்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவர் அடுத்ததாக இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் பூர்வீக ஊர் தமிழகத்தில் உள்ள பரமக்குடி ஆகும்.

Advertisement

ரஜினி:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் இவர் நடிக்க உள்ளார். இவரின் பூர்வீக ஊர் மகாராஷ்டிரா ஆகும். ஆனால் இவர் வளர்ந்தது பெங்களூரில் தான்.

Advertisement

அஜித்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் பூர்விக ஊர் செகந்திராபாத்.

Advertisement

விஜய்:

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் பூர்விக ஊர் சென்னை.

Advertisement

விக்ரம்:

தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான கோப்ரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் பூர்விகா ஊர் பரமக்குடி.

Advertisement

பாக்கியராஜ்:

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் பாக்கியராஜ். இவர் தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் பூர்விக ஊர் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில்.

Advertisement

ராமராஜன்:

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக கலக்கிய நடிகர் ராமராஜன் தற்போது சினிமாவிலிருந்து விலகி உள்ளார். இவரின் பூர்வீக ஊர் மதுரை அருகில் உள்ள மேலூர்.

Advertisement

சத்யராஜ்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் ஹிரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில் இவரின் பூர்வீக ஊர் கோயம்புத்தூர்.

Advertisement

பிரசாந்த்:

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் பிரசாந்த். இவர் பிறந்தது சென்னையில்தான். ஆனால் இவரின் பூர்விக ஊர் மதுரை.

Advertisement

அருண் விஜய்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய். இவரும் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். இவரின் பூர்விகா ஊர் தஞ்சாவூர்.

Advertisement

தனுஷ்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷின் பூர்வீக ஊர் மதுரை பக்கத்தில் உள்ள தேனியாகும்.

Advertisement

ஆர்யா:

தமிழ் சினிமாவில் இன்று ஸ்டாப் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரின் பூர்வீக ஊர் கேரளாவில் உள்ள காசர்கோடு.

Advertisement

சிம்பு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையாக இருந்தாலும் இவருடைய பூர்வீக ஊர் மாயவரம்.

Advertisement

அர்ஜூன்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் அர்ஜுனின் பூர்வீக ஊர் கர்நாடக மாநிலம் மைசூர் ஆகும்.

Advertisement

ஜீவா:

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தாலும் இவரால் முன்னாடி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையாக இருந்தாலும் இவரின் பூர்விக ஊர் ராஜஸ்தான் மாநிலம்.

Advertisement

விஷால்:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிறந்தது சென்னையாக இருந்தாலும் இவரின் பூர்வீக ஊர் ஆந்திர பிரதேசம்.

Advertisement

கவுண்டமணி:

தமிழ் சினிமாவில் காமெடியில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் கவுண்டமணியின் பூர்விக ஊர் கோயம்புத்தூர். இன்றும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் இவர்.

Advertisement

விஷ்ணு விஷால்:

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் விஷ்ணு விஷால். இவரின் பூர்வீக ஊர் வெல்லூர்.

Advertisement

முரளி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் முரளி. இவரின் மறைவிற்குப் பிறகு இவர் மகன் அதர்வா தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் முரளியின் பூர்விகா ஊர் பெங்களூர்.

Advertisement

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் பிறந்தது வளர்ந்தது திருச்சி என்றாலும் இவரின் பூர்விக ஊர் சிவகங்கை பக்கத்தில் உள்ள சிங்கம் புணரி.

Advertisement

விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் பூர்வீக ஊர் ராஜபாளையம்.

Advertisement

நடிகர் விவேக்:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக் பூர்வீகம் கோவில்பட்டி. ஆனால் இவர் படித்தது மற்றும் வளர்ந்தது எல்லாமே மதுரை மாவட்டத்தில்தான்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in