உயரிய விருதான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. முழு பட்டியல்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உயரிய விருதான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. முழு பட்டியல்….!!!

Published

on

தென்னிந்திய சினிமா துறையில் இந்திய அரசால் கவுரவிக்கப்படும் உயர்ந்த விருது தான் தேசிய விருது. இது இந்தியாவின் உயர்ந்த விருது. இந்த அமைப்பை 1967 ஆம் ஆண்டு இந்திய அரசு தொடங்கிய நிலையில் சில சிறந்த நடிகர்களை ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்த இந்தியாவின் முக்கிய பிரபலங்களால் கவுரவிக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழ் நட்சத்திரங்கள் சிலர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். அப்படி தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் -1971

Advertisement

தமிழ் சினிமாவில் 70 மட்டும் 80களில் கலக்கிய முன்னணி நடிகர் தான் எம்ஜிஆர். இவரின் திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. இவர் 1971 ஆம் ஆண்டு ரிக்சாக்காரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவரே தமிழ் திரை உலகின் முதல் முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற புகழையும் கொண்டவர்.

கமல்ஹாசன் (1982, 1987, 1996)

Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை, 1987 ஆம் ஆண்டு நாயகன், 1996 ஆம் ஆண்டு இந்தியன் என தனது நடிப்பிற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்த சாதனையை இதுவரை யாரும் இந்தியாவில் நிகழ்த்தியது கிடையாது. சிறுவயதில் நடிக்க தொடங்கிய இவர் திரையுலகில் இது போன்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

விக்ரம் (2003)

Advertisement

முன்னணி நடிகராக திகழும் விக்ரம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவரின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் இவரை முன்னணி நடிகராக உயர்த்தியது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மூலம் பல விருதுகளையும் குவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் (2007)

Advertisement

தமிழ் சினிமாவில் தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் கடந்த 2007 ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார்.

தனுஷ் (2010, 2019)

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கும் தனுஷ் கடந்த 2010 மட்டும் 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி (2019)

Advertisement

நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் தேசிய விருது பெற்றார்.

சூர்யா (2020)

Advertisement

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது கடந்த வருடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in