மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் சென்று… அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் சென்று… அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவரின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா.

Advertisement

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பிறகு திரை பணிகளை கவனித்து வந்த மனோபாலா கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த மனோபாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் அவர்நேற்று  சிகிச்சை பலனின்றி தனது வீட்டில் காலை உயிரிழந்தார்.

இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று வரும் நிலையில் இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in