LATEST NEWS
இளம் வயதில் அட்டைப்படத்திற்காக…. அந்த உடையில் போட்டோ சூட் எடுத்த…. பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி….!!!!
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அமீருடன் காதலில் சிக்கி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்ட நிலையில் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை பாவணியின் பழைய போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அட்டை படத்திற்காக செம கிளாமரான உடையில் அவர் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
