LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு அவுட்டிங் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட…. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா தம்பதி….!!!!
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவரின் மகன் தான் கௌதம் கார்த்திக்.
தனது தந்தையை போலவே சினிமாவில் மக்களை கவர்ந்து முன்னணி நடிகராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌதம் கார்த்திக்.
இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 10 தல திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை இவர் காதலித்து வந்தார்.
அதன் பிறகு இவர் கடந்த வருடம் இறுதியில் தான் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இது பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது திருமணத்தில் மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை கேலி செய்து வந்தது பற்றி ஓபன் ஆக பேசி இருந்தார்.
தற்போது திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மஞ்சுமா மோகன் மாறியுள்ளார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் அவுட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
