“அடுத்து இந்த நடிகை கூடத்தான் நடிக்கணும்”… மனம் திறந்து ஆசையை கூறிய ஜிபி முத்து…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்து இந்த நடிகை கூடத்தான் நடிக்கணும்”… மனம் திறந்து ஆசையை கூறிய ஜிபி முத்து…!!

Published

on

டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜி பி முத்து. இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிகை சன்னி லியோனுடன் இணைந்து நடித்திருந்தார். அதே சமயம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஜிபி முத்துவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் ஜிபி முத்து அளித்த பேட்டியில், தனக்கு நடிகை நயன்தாராவுடன் நடிப்பதற்கு ஆசை என்று கூறியுள்ளார். இவர் அடுத்ததாக பம்பர் என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடித்துவரும் நிலையில் அந்த திரைப்படத்தின் பேட்டியில் ஜிபி முத்து இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in