LATEST NEWS
நடிகர் அரவிந்த் ஆகாஷின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் அரவிந்த் ஆகாஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் கிருஷ்ணராக நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் இவர் புகழ் பெற்றார்.
மலையாளம் மற்றும் தமிழில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இவர் நடுவராகவும் இருந்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
இவரின் தாயார் தமிழ் திரைப்படங்களில் நடன கலைஞராக பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஆகாஷ் தனது ஆரம்பக் கல்வியை சில்ட்ரன் கார்டன் பள்ளியிலும், கேசரி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
இவர் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதே சமயம் சென்னை மாடர்ன் டான்ஸ் அகாடமியில் நடந்த பாடங்களையும் கற்றுள்ளார்.
இவர் முதன் முதலில் குட்டி பத்மினியின் தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு கஞ்சி சொடுதே என்ற தலைப்பில் அவரது மகள் கீர்த்தனா உதயனுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.
தயாரிப்பை தொடங்கிய போதும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து படையப்பா திரைப்படத்தில் 1999 ஆம் ஆண்டு ஒரு பாடலில் நடனமாடி இருப்பார்.
இவர் நந்தனம், வஜ்ரம், ரசிக்கும் சீமானே மற்றும் கண்ணுல காச காட்டப்பா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே சமயம் மலையாள படங்களுக்கும் சில பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். 2006 ஆம் ஆண்டு அவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் சீசன் 1 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
இதனைப் போலவே மலையாளத்தில் பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
