நடிகை மஞ்சு வாரியார் மகளை பார்த்துள்ளீர்களா?…. அப்படியே அம்மாவ உறிச்சி வச்சிருக்காங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை மஞ்சு வாரியார் மகளை பார்த்துள்ளீர்களா?…. அப்படியே அம்மாவ உறிச்சி வச்சிருக்காங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

மலையாளத் திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனிடையே நடிகை மஞ்சுவாரியார் கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகளும் உள்ளார். பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Advertisement

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியாரின் மகள் மீனாட்சி இன் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியே மஞ்சுவாரியார் போலவே இருக்காங்களே எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in