90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை மந்த்ராவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை மந்த்ராவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தமிழில் அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

Advertisement

தெலுங்கு சினிமாவில் ராசி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் மந்த்ரா என்ற பெயரில் நடித்தவர். ஆனால் இவரின் உண்மையான பெயர் விஜயா.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த பிரீமியம் என்ற திரைப்படத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த லவ் டுடே மற்றும் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இப்படி பிசியான நடிகையாக திகழ்ந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

Advertisement

இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

Advertisement

ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில வருடங்களாக இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் இவர் அழகு குறிப்புகள், எடை குறைப்பு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மந்த்ரா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

தற்போது அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in