காமெடி நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. அவரின் மகள் பிரபல பாடகியா?.. புகைப்படங்கள் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. அவரின் மகள் பிரபல பாடகியா?.. புகைப்படங்கள் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் மதன் பாபு. இவரின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையிலேயே ஒரு இசை கலைஞர்.

அதாவது இசை புயல் ஏ ஆர் ரகுமானின் இசை ஆசிரியர் இவர்தான். கடந்த 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த மதம் பாபு 1984 ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு வானமே எல்லை, தேவர் மகன், திருடா திருடா மற்றும் பூவே உனக்காக என 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரை காமெடியில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து காமெடியை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். இப்படி பல புகழுக்குரிய இவருக்கு ஜனனி என்ற ஒரு மகள் உள்ளார்.

தன்னுடைய தந்தையிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் ஒரு சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஊருக்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

Advertisement

குறிப்பாக வீராப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற போனா வருவீரோ, தனுஷின் ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான் என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார்.

இதனை கேட்டது ரசிகர்கள் பலரும் மதன் பாபுவின் மகள் பிரபலமான பாடகியா என்று கூறி புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.  தற்போது மதன் பாபுவின் குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in