LATEST NEWS
கண்ணக்குழி அழகி நடிகை லைலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்தவர் தான் நடிகை லைலா.
எப்போதும் சிரித்த முகம், கன்னக்குழி அழகு, துறுதுருப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் உங்களை வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.தமிழ் படங்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இன்று வரை இவர் தக்க வைத்துள்ளார்.
பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் லைலா சிறந்த நடிகை காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.
குறிப்பாக சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதில் இவரின் நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தீனா, முதல்வன், ரோஜாவனம், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன்,அள்ளித்தந்த வானம் மற்றும் நந்தா உள்ளிட்ட பல திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் திருமணத்திற்கு முன்பு இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.
சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் குழந்தைகள் என இருந்து வந்த லைலா 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பினார்.
அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் இவர் நடித்து அசத்தியிருந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
