LATEST NEWS
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.
இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன் பிறகு இவருடைய இசையில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் மற்றும் நண்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தன.
தற்போது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் JR 30 என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.
உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரபாடறா என்ற அவரின் முதல் படமான மின்னலே திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியதாலோ என்னவோ அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பல நூறு பாடல்களிலும் அந்த மின்சாரத்தின் பாய்ச்சலை கேட்க முடிந்தது.
இவரின் இசைக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. இவரின் இசையில் இறுதியாக துருவ நட்சத்திரம் படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இவர் சுமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்.
தனது தந்தையே போலவே இவரும் இசையில் வல்லவர். இவர் பல பாடல்களையும் பாடி உள்ளார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுமா ஹாரிஸ் அடிக்கடி குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
