விருமாண்டி ஓ.ஏ.கே சுந்தரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விருமாண்டி ஓ.ஏ.கே சுந்தரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் ஓ எ கே சுந்தர். இவர் முதலில் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

அதாவது தொலைக்காட்சி தொடரான ரோமபுரி பாண்டியன் மற்றும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பீஷ்மர் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.

Advertisement

இவரின் தந்தை தமிழ் நடிகரான ஓகே தேவர். ஓ ஏ கே சுந்தர் முதன்முதலாக 1992 ஆம் ஆண்டு நாடோடி பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னாடி நடிகரான கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த விருமாண்டி திரைப்படத்தில் 2004 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் சுந்தர் பிரபலமானார்.

Advertisement

பின்னர் 2007 ஆம் ஆண்டு நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் அடுத்தடுத்து துணை வேடங்களில் நடித்து அசத்தினார்.

குறிப்பாக மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Advertisement

பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய பிறகு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவதற்காக அவற்றில் பணிபுரிவதை நிறுத்திவிட்டார்.

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான கிடாரி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான சாமி 2, 2019 ஆம் ஆண்டு தி ரிவேஞ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இன்றும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி பல திரைப்படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்த இவர் 2006 ஆம் ஆண்டு லோகநாயகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த தம்பதிகளுக்கு ஆதிசங்கர் என்ற ஒரு மகனும் உள்ளார். தற்போது ஓஏகே சுந்தரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in