LATEST NEWS
90ஸ் கிட்ஸ் ஃபேவரேட் செய்தி வாசிப்பாளர் சுரேஷ்குமாரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!
சன் டிவியில் 90களில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை இன்றும் பலராலும் மறக்கவே முடியாது.
அவ்வகையில் வாரம் தோறும் டிப் டாப் உடை அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடியும் நின்றபடியே ஒரு வாரத்தில் வெளியான திரைப்படங்களை விமர்சித்த அந்த நபரை 90ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
டாப் 10 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுரேஷ்குமார்.
ஆரம்ப காலத்தில் இரண்டு ஆண்டுகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் டாப் டென் நிகழ்ச்சியை 22 வருடங்களாக தொகுத்து வழங்கினார்.
ஆனால் இவர் கடந்த சில வருடங்களாக எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை.
இருந்தாலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் முடிந்து கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் உள்ளார்.
மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுரேஷ் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவர் சமீபத்தில் கூட தற்போது வரும் படங்கள் எதுவுமே பிடிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இப்படி லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட செய்தி வாசிப்பாளர் சுரேஷ்குமாரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
