தமிழ் காமெடி நடிகர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் காமெடி நடிகர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட காமெடி நடிகர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய காமெடி திறமையால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்கள் ஏராளம். அப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர்கள் தங்கள் மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்த சிறிய தொகுப்பு இது.

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் மறைந்த பிறகும் இன்றும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் விவேக். இவரின் காமெடிகளுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அருள் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் அதில் ஒரு குழந்தை 2015 ஆம் ஆண்டு மூளை காய்ச்சலால் இறந்துவிட்டது.

Advertisement

தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னவுடன் அனைவரும் நினைவுக்கும் வரும் பெயர் கட்டாயம் அது வடிவேலு தான். அந்த அளவிற்கு காமெடியில் கலக்கியவர். இவர் சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இவர் விஷாலாட்சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

தற்போது சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகர் தான் சதீஷ். இவர் நாய் சேகர் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அடுத்ததாக மேடை நிகழ்ச்சிகளில் காமெடியை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தான் அஸ்வின். இவர் வித்யஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் தான் பாலசரவணன். இவர் சூர்யா ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகர் தான் கஞ்சா கருப்பு. இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் உருவ கேளிக்கு செவி சாய்க்காமல் தன்னுடைய நடிப்பு திறமையால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் பக்ரு என்கிற அஜய்குமார். இவர் காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

அடுத்ததாக ஒல்லியான உருவம் கூர்மையான மூக்கு கிளி போன்ற பேச்சு போன்றவற்றால் காமெடியில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் தான் கொட்டாச்சி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள காமெடி நடிகர் தான் யோகி பாபு. இவர் மஞ்சு பார்கவி என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் தான் சந்தானம். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in