தமிழ் சினிமா நடிகர்கள் அன்றும், இன்றும்…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா நடிகர்கள் அன்றும், இன்றும்…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்கள் ஏராளம். அதே சமயம் சிறிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இன்று டாப் நடிகராக உள்ள நடிகர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்கள் சினிமாவில் நுழைந்த போது இருந்ததற்கும் தற்போது அவர்கள் சினிமாவில் வளர்ச்சி அடைந்த பிறகு இருக்கும் தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அப்படி சினிமாவின் நடிகர்கள் அன்று எப்படி இருந்தார்கள் இன்று எப்படி உள்ளார்கள் என்பது குறித்த ஒரு தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். இவர் 1976 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சினிமாவில் பல மொழிகளிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் நடிகர் சஞ்சய் தத். தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய ஒரு நடிகர் தான் சார்லி. இவர் சமீப காலமாக துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் அப்போது இருந்ததற்கும் தற்போது உள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

Advertisement

காமெடியில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது அனைவரும் ரசிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவரின் இசை இல்லாத திரைப்படமே இன்று பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

Advertisement

ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டவர். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகையான ஷகீலா தற்போது அவ்வளவாக படங்களில் நடிப்பதில்லை. விஜய் டிவியில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். சினிமாவில் நுழைந்தபோது இளமையாக இருந்த இவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

Advertisement

தமிழ்சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் பிரசன்னா. இவர் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சல்மான் கான் சினிமாவில் நுழைந்த போது இருந்ததற்கும் தற்போது அதிக அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஹாலிவுட் நடிகரான ரோவன் அட்கின்சன் தன்னுடைய காமெடியால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். இவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே கிடையாது. தற்போது இவர் வயதாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.

90களில் தன்னுடைய பேச்சாள் ரசிகர்களை கவர்ந்தவர் தான் டி ராஜேந்தர். சிறுவயதிலேயே தன்னுடைய மகன் சிம்புவையும் சினிமாவில் கொண்டு வந்தார். தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகியுள்ள நிலையில் அவரின் மகன் சிம்பு சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

நடிகர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இன்று பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடும் அவர் அன்று ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார்.

காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது பரோட்டா சூரி தான். தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ள சூரி சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தற்போது முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் மகள் இந்திரஜாவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in