LATEST NEWS
மாலத்தீவில் கணவருடன் 11 வது திருமண நாளை கொண்டாடிய தொகுப்பாளினி பாவனா…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தொகுப்பாளனிகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாவனா. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் எப்போதும் கலகலப்பாக தான் இருக்கும். அதேசமயம் கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளையும் தனது சுவாரசியமான பேச்சால் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் அண்மையில் விராட் கோலி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த நிலையில் தற்போது தனது கணவருடன் மாலத்தீவில் 11 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
