முகத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி…. இனி இப்படித்தான்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முகத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி…. இனி இப்படித்தான்….!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது அதாவது தான் செய்யும் மேக்கப் விஷயங்கள் மற்றும் சில அழகு டிப்ஸ் என வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

முகத்திற்கு கொடுக்க வேண்டிய மசாஜ் மற்றும் தான் அதிகம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் என இரண்டு வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக அந்த வீடியோவில் அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கிறார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dhibba💃Dance all The Way இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ddneelakandan)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in