தமிழகத்தின் பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி…. தீயாய் பரவும் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகத்தின் பிரபல கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி…. தீயாய் பரவும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் .

Advertisement

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது.

இவரின் நடிப்பில் அடுத்ததாக இறைவன் திரைப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் அகிலன் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

ப்ரியா பவானி சங்கர் மற்றும் தனியா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த அவர் பிரகாரத்தையும் சுற்றி வந்தார்.

Advertisement

அப்போது கோவிலின் சார்பாக சிறப்பு பிரசாத பொருட்களும் அவருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in