தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.

இவரின் நடிப்பில் அடுத்ததாக இறைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் லுக் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அவர் வெள்ளை தாடியுடன் இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அதனை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.