தென்னிந்திய சினிமா துறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். தங்களின் புற்றுநோய் பயணத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிடும் பதிவு மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்து வருகிறது.

அதன்படி நான் ஈ திரைப்பட நடிகை ஹம்சா நந்தினி சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அதற்காக அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சையில் இருந்த அவரின் முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் அவர் தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு தலையில் சுத்தமாக முடி இல்லாத புகைப்படம் மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hamsa Nandini இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihamsanandini)