LATEST NEWS
“நான் சட்டப்படி சிங்கிள் தான், அவர் என் கணவரே இல்லை”…. நடிகை வனிதா வெளியிட்ட திடீர் அறிக்கை….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு முறை விவாகரத்து செய்து பிரிந்தார். தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அவரின் மரணம் பற்றி வனிதா உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் நீங்கள் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறி இருந்தார். இந்நிலையில் மீடியாவில் வனிதாவின் மூன்றாவது கணவர் என தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதா தற்போது கோபமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதில், நான் சட்டப்படி பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் 2020 ஆம் ஆண்டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். அதே ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. நான் அவர் மனைவியும் இல்லை அவர் என் கணவரும் இல்லை. நான் சட்டப்படி சிங்கிள் தான், எனக்கு கணவர் இல்லை, நான் எதற்காகவும் துக்கத்தில் இல்லை மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். வனிதாவின் மூன்றாவது கணவர் என்று குறிப்பிடும் செய்தியை நிறுத்துங்கள் என்று வனிதா கோவமாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
