விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்…. இதோ சிறப்பு தொகுப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்…. இதோ சிறப்பு தொகுப்பு…!!

Published

on

இந்தியாவில் விளையாட்டு வீரர்களில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சினிமா நடிகர்களுக்கு நிகரான சம்பளம் பெற்று வருகிறார்கள். அவ்வாறு அதிக சம்பளம் பெறும் வீரர்கள் பலரும் உயர்தர ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பயன்படுத்தும் விலை உயர்ந்த ஆடம்பர கார்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Advertisement

விராட் கோலி:

உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் விராட் கோலி. இவர் விலை உயர்ந்த பென்ட்லி கான்டினேன்டல் பிளேயிங் ஸ்பர் காரை பயன்படுத்துகிறார். இதன் விலை சுமார் 3.41 கோடி முதல் 3.93 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

 

மகேந்திர சிங் தோனி:

Advertisement

இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி அண்மையில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் காரை வாங்கியுள்ளார். CBUவாகனமான இதன் விலை இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.

ஹர்பஜன் சிங்:

Advertisement

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 சிவப்பு காரை வண்ணப்பூச்சி நிழலில் வாங்கினார். அதன் பிறகு அவரின் ரசனைக்கு ஏற்ப அதனை மாற்றிக் கொண்டார். இந்த காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 85 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா:

Advertisement

இவர் புதிய நவீன தலைமுறை மெர்சிடைஸ் ஏஎம்ஜி ஜி 63 என்ற காரை வாங்கியுள்ளார். இந்த காரின் சராசரி விலைமதிப்பு 2.19 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவே x ஷோரூம் மற்றும் ஆன் ரோடு விலை மூன்று கோடி ரூபாய் ஆகும் .

சச்சின் டெண்டுல்கர்:

Advertisement

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ எம் 760 லி என்ற காரை பயன்படுத்தி வருகிறார். இவர் கடந்த வருடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கினார். இந்த கார்களின் விலை சுமார் 3.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

யுவராஜ் சிங்:

Advertisement

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிகப்பெரிய ரசிகராக இருந்து வரும் இவர் x6 எம் கார்களை வாங்கியுள்ளார். இவர் பிஎம்டபிள்யூ எம்5 கார்களையும் பயன்படுத்தி வருகிறார். இதன் விலை சுமார் 2.6 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

ரோகித் சர்மா:

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் நம்பகமான வீரர்களில் ஒருவரான இவர் பிஎம்டபிள்யூ எம் 5 காரை பயன்படுத்துகிறார். அதன் விலை சுமார் 1.55 கோடி ஆகும். இதனைத் தவிர பிஎம்டபிள்யூ எக்ஸ்3, டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களையும் பயன்படுத்தி வருகிறார்.

கே எல் ராகுல்:

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான கே எல் ராகுல் mercedes c43 AMG என்ற காரை வைத்துள்ளார். பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த காரின் விலை சுமார் 75 லட்சம் ரூபாயாகும்.

ஷிகர் தவான்:

Advertisement

இந்திய அணையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் கப்பர் என்ற செல்லமாக அழைக்கப்படும் ஷிகர் தவான், மெர்சிடிஸ் ஜிஎல் 350 சிடிஐ காரை பயன்படுத்தி வருகிறார். மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த காரின் விலை சுமார் 80 லட்சம் ஆகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in