LATEST NEWS
அம்மாச்சி பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய இந்திரஜா சங்கர் குடும்பம்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.
முதன்முதலாக ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் ரோபோ சங்கர் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது திருமண நாளை ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது.
ரஜினியுடன் குடும்பத்தினர் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். இவரின் மனைவி விஜய் டிவியின் குவித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வருகிறார்.
அதனைப் போலவே இவரின் மகள் இந்திரஜா சங்கரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் விஜய் உடன் பிகில், கார்த்தி உடன் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் சமீபத்தில் தனது அம்மாச்சியின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
