LATEST NEWS
இதெல்லாம் ஒரு பிராங்க்கா?…. நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ராதிகாவை கடுப்பேற்றிய பிக்பாஸ் தனலட்சுமி….!!!
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி ஏராளமான கலைஞர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு. தற்போது இந்த நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் 4 சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மதுரை முத்து, பாலாஜி, சீரியல் நடிகை ரேஷ்மா மற்றும் ரித்திகா ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.
அதேசமயம் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வர இந்த வாரம் பிக் பாஸ் பிரபலங்களான தனலட்சுமி, ஜனனி மற்றும் அமுதவாணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிஷாவை பார்த்து ஏன் அப்படி சொன்னீங்க என்று தனலட்சுமி ஏதோ ஒரு வார்த்தையை கேட்க அதற்கு நிஷாவும் கோபப்பட்டுள்ளார்.
பின்னர் வாக்குவாதம் செய்த தனலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அப்போது பாலாவும் கிண்டலாக எதையோ பேச அதன் பிறகு இது பிராங்க் தான் என நிஷாவுக்கு ஷாக் கொடுத்தனர்.அதனைக் கண்டு கோபமடைந்த பாக்கியலட்சுமி ரேஷ்மா மைக்கை கழட்டிவிட்டு வெளியேறிய புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
