சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?…. ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே…. வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?…. ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே…. வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரை உலகில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை கச்சேரியில் பாடி அசத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடி அசத்தார். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம் மற்றும் பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வரும் நிலையில் பெரிய வீடு, ஸ்டூடியோ மற்றும் பங்களா என வளர்ந்து விட்டனர்.

Advertisement

தற்போது ராஜலட்சுமி ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஜலட்சுமி இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுவரை இல்லாத வேறுபட்ட லுக்கில் ராஜலட்சுமி நடித்துள்ள லைசென்ஸ் திரைப்பட லுக் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in