அடடே பொன்னியின் செல்வன் 2 படத்தில் சிறுவயது ஆதித்ய கரிகாலனாக நடித்தது இவரா?…. வெளிவந்த புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே பொன்னியின் செல்வன் 2 படத்தில் சிறுவயது ஆதித்ய கரிகாலனாக நடித்தது இவரா?…. வெளிவந்த புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Advertisement

இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது விக்ரம் நடித்த ஆதித்யா கரிகாலன் கதாபாத்திரம் தான்.

அந்த கதாபாத்திரத்தில் சிறுவயது தோற்றத்தில் நடித்த நடிகரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அவரின் இயற்பெயர் சந்தோஷ். இரண்டாம் பாகத்தின் தொடக்க காட்சியில் சந்தோஷத்தின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது அவருடைய புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in