LATEST NEWS
முதல் நாளே இப்படியா?… ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துக்கு வந்த புதிய சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் தற்போது திரைப்படத்திற்கு புதிய சிக்கல் இருந்துள்ளது. அதாவது படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன சில நிமிடங்களில் படம் முழுவதும் பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு அந்த திரைப்படம் பகிரப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. இப்படி திருட்டுத்தனமாக இணையத்தில் படம் லீக் ஆகி இருப்பதால் படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
