VIDEOS
இந்த மனசு யாருக்கு யாரும்… உதறி தள்ளிய நெல்சன்.. படப்பிடிப்பில் கட்டியணைத்த ரஜினி… பலரையும் நெகிழ வைக்கும் பின்னணி..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் ரஜினி நடந்து கொண்ட விதம் பற்றி பேசிய ஒருவர், படத்தில் நடிப்பதற்கு ஒருவர் வந்த நிலையில் திடீரென அவர் காட்சியை ரத்து செய்யப்பட்டதால் அவரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
அப்போது ரஜினி வீட்டில் ஆசையாக சொல்லிட்டு வந்திருப்பாரு இந்த படத்தில் நடிக்கிறேன் என்று இப்ப இல்லன்னு சொன்னா ரொம்ப கஷ்டப்படுவார் என்று கூறி தன் பக்கத்தில் நிற்க வைத்து தோல் மேல் கை போட்டு ஒரு காட்சியை ரஜினி எடுக்குமாறு கூறினார். இதுதான் தலைவரின் குணம் என்று பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க