மறைந்த இயக்குனர் சித்திக் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சூர்யா… வெளியான வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

மறைந்த இயக்குனர் சித்திக் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சூர்யா… வெளியான வீடியோ..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் சித்திக். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு காவலன் திரைப்படத்தின் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான். இவ்வாறு புகழ்பெற்ற இயக்குனரான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Advertisement

இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சூர்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அவரின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamilan Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilan_media_)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in