LATEST NEWS
விஜய் பட இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் சித்திக். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து விஜய்க்கு காவலன் திரைப்படத்தின் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான். இவ்வாறு புகழ்பெற்ற இயக்குனரான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
