LATEST NEWS
“வாரத்திற்கு 5 இரவுகள், ஒரே நாளில் 15 ஆண்கள்…” – 67 வயது முதியவன் நடத்திய 30 ஆண்டுகால கொடூரம்…!இணையத்தில் லீக்கான ஆபாச வீடியோக்கள்…!ரோட்னி ஜான்ஸ்டனுக்கு விழுந்த 16 ஆண்டு சிறை சாட்டையடி…!
கடந்த முப்பது ஆண்டுகாலமாக ஒரு பெண்ணை ஏறத்தாழ 1,000 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்த கொடூர குற்றத்திற்காக, ரோட்னி ஜான்ஸ்டன் (67) என்ற நபருக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நோர்போக்கில் உள்ள ஸ்டார்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த இந்த நபர், தனது வக்கிரமான பாலியல் ஆசைகளுக்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி, தொலைதூர கிராமப்புறப் பகுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களில் பல்வேறு ஆண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவங்கள் பல மணிநேரம் நீடித்ததோடு, சில நாட்களில் ஒரே நாளில் 15 ஆண்கள் வரை அந்தப் பெண்ணைச் சீரழித்ததாக நீதிமன்ற விசாரணையில் நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994 முதல் 2024 வரையிலான மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த இந்த நீண்டகாலத் துன்புறுத்தல்களைப் படம் பிடித்து, முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக ஜான்ஸ்டன் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். வாரத்திற்கு ஐந்து இரவுகள் பல ஆண்களுடன் பாலியல் ரீதியாக ஈடுபடுவதற்காக அந்தப் பெண் கட்டாயத்தின் பேரில் வெளியே அனுப்பப்பட்டுள்ளார். முன்பின் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின், தனக்கு மிகவும் அருவருப்பாக இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதில் சற்றும் உடன்பாடு இல்லை என்ற போதும், கடுமையான மிரட்டல்கள் மூலம் அவர் அடிபணிய வைக்கப்பட்டுள்ளார்.
வயது வந்தோருக்கான பிரத்யேக சமூக வலைத்தளங்கள் வழியாகப் பல ஆண்களைத் தொடர்புகொண்ட ஜான்ஸ்டன், குறிப்பிட்ட நேரங்களிலும் இடங்களிலும் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்துப் பெருமளவில் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களைத் திரட்டியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலும் அம்பலமாகியுள்ளது. சுமார் ஆறு வாரங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முழுவதும், அந்தப் பெண்ணின் பரஸ்பர சம்மதத்துடனேயே அனைத்தும் நடந்ததாகக் கூறி ஜான்ஸ்டன் தன்னை நிரபராதி என வாதிட்டார். ஆனால், பல தசாப்தங்களாகத் தன்னை ‘ஒரு பொருளாக மட்டுமே’ நடத்தி பேரச்சத்தில் ஆழ்த்திய ஒரு அரக்கன் ஜான்ஸ்டன் என்று பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முப்பதாண்டுகளாக எவருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த இந்த விபரீதம், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிள்ளைகளால் வெளிச்சத்திற்கு வந்தது. இணையத்தில் இருந்த ஆபாசப் படங்கள் பிள்ளைகளின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜான்ஸ்டனைக் கைது செய்தனர். பல தசாப்த காலக் கொடூரங்களை வெளிக்கொண்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
