நான் இனவெறியன் அல்ல.. என் பிள்ளைக்கே சேகர்ன்னு பெயர் வச்சிருக்கேன்… எலான் மஸ்க் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் இனவெறியன் அல்ல.. என் பிள்ளைக்கே சேகர்ன்னு பெயர் வச்சிருக்கேன்… எலான் மஸ்க் ஓபன் டாக்..!!

Published

on

தான் இனவெறியர் என்ற குற்றச்சாட்டை எலான் மஸ்க் முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், தனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், தங்களது ஒரு குழந்தைக்கு இந்திய விஞ்ஞானியின் நினைவாக ‘சேகர்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு இருக்கும்போது தான் எவ்வாறு இனவெறியராக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவரிடம் ‘நீங்கள் முஸ்லிம் விரோதியா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, தான் எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்று விளக்கமளித்தார். மேற்கத்திய நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் கலாச்சார விதிகளுக்கும் முரணான விஷயங்களைச் சமூகத்தில் திணிப்பதை மட்டுமே தான் எதிர்ப்பதாக அவர் அந்தப் பேட்டியில் தெளிவாகத் தெரிவித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in