“டிரம்பையே விலைக்கு வாங்கலாம்.. ஆனா இந்தியாவை…” ரெண்டு குத்து விட்டா ஓடிடுவாரு…! எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிரம்பையே விலைக்கு வாங்கலாம்.. ஆனா இந்தியாவை…” ரெண்டு குத்து விட்டா ஓடிடுவாரு…! எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி…!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்த்தன் மிஸ்ரா, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது எலான் மஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை விலைக்கு வாங்கியிருக்கலாம், ஆனால் அவரால் இந்தியாவை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை யாரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்றும், இங்குள்ள தலைமைக்கு யாரும் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் மிகக் காரசாரமாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், எலான் மஸ்க் உலகையே தனது பண பலத்தால் விலைக்கு வாங்க நினைக்கலாம், ஆனால் இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமானால் அது பிரதமர் நரேந்திர மோடியின் நிபந்தனைகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு மட்டுமே சாத்தியமாகும் எனக் கூறினார். மேலும், “எலான் மஸ்க் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால், அவருக்கு இரண்டு குத்துக்கள் விட்டால் ஓடிவிடுவார், எனவே அவரைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை” என்று தனது வட்டார மொழியில் அதிரடியாகப் பேசினார்.

Advertisement

எம்.பி ஜனார்த்தன் மிஸ்ராவின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முன்னதாகவும் இவர் கழிப்பறையைக் கைகளால் சுத்தம் செய்தது, “குட்கா சாப்பிடுங்கள், மது அருந்துங்கள் ஆனால் தண்ணீர சேமியுங்கள்” எனக் கூறியது போன்ற பல்வேறு விசித்திரமான கருத்துக்களால் செய்திகளில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in