அட நம்ம ‘கனா’ பட நடிகையா இவங்க…!”சென்னையை விட்டே ஓடுகிறேனா?” – கண்ணீருடன் கெனிஷா வெளியிட்ட அந்த ஒற்றை வீடியோ…!ஆர்த்தி கொடுத்த பதிலடி…! – cinefeeds
Connect with us

CINEMA

அட நம்ம ‘கனா’ பட நடிகையா இவங்க…!”சென்னையை விட்டே ஓடுகிறேனா?” – கண்ணீருடன் கெனிஷா வெளியிட்ட அந்த ஒற்றை வீடியோ…!ஆர்த்தி கொடுத்த பதிலடி…!

Published

on

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது நடிகர்  ரவி மோகன், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரின் விவகாரம். சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழக மக்களுக்கு பெரிதாக அறிமுகமில்லாத கெனிஷா, ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அறிவித்த சில நாட்களிலேயே அவருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஒரே நிறத்திலான ஆடையில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர்களின் நெருக்கமான நட்பைக் கண்ட திரைத்துறையினரும் ரசிகர்களும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கணித்த நிலையில், தற்போது இவர்களது உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆர்த்தியுடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு எழுந்த பல்வேறு அறிக்கை போர்களுக்கு மத்தியில், கெனிஷாவுடனான உறவை ஜெயம் ரவி முதலில் திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால், காலப்போக்கில் இவர்களது நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததை இருவரின் செயல்பாடுகளும் உணர்த்தின. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கெனிஷா வெளியிட்ட ஒரு வீடியோ இந்த விவகாரத்தை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் கரு கலைந்தது உள்ளிட்ட தனிப்பட்ட சோகங்களை பகிர்ந்த கெனிஷா, தான் ரவியின் குடும்பத்தை பிரிக்கவில்லை என்றும், இனி அவருக்காக போராடாமல் அவரை முழு சுதந்திரத்துடன் வழியனுப்பி வைப்பதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

கெனிஷாவின் இந்த அதிரடி வீடியோவிற்கு ஆர்த்தி ரவி பதிலடி கொடுக்க, இதனால் கொந்தளித்துப் போன ஜெயம் ரவி செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பு நியாயங்களை கொட்டித் தீர்த்தார். இதனால் இந்த மும்முனை பஞ்சாயத்து மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, தான் சொன்னபடியே கெனிஷா சென்னையை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இந்த மன உளைச்சல்களில் இருந்து விடுபட சில காலம் திரையுலகில் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் முழுமையாக பிரேக் எடுக்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னணி பாடகியாகவும், மனநல ஆலோசகராகவும் (Therapist) அறியப்பட்ட கெனிஷா, சுயாதீன இசைத்துறையில் (Indie Music) இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தார். இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்பதே அவரது நலம் விரும்பிகளின் ஆசையாக உள்ளது. இதற்கிடையே, அவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற சுவாரசியமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படத்தின் இறுதி காட்சியில், கிரிக்கெட் போட்டிக்கான தொகுப்பாளினியாக கெனிஷா நடித்திருந்தார். அந்தப் புகைப்படங்களை இப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, “அட, நம்ம கெனிஷாவா இது!” என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in