LATEST NEWS
மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்திடம் மனம் உருகி மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்.. என்ன காரணம் தெரியுமா..??
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் சித்திக். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.
இதனைத் தொடர்ந்து விஜய்க்கு காவலன் திரைப்படத்தின் வெற்றியை கொடுத்தது இயக்குனர் சித்திக் தான். இவ்வாறு புகழ்பெற்ற இயக்குனரான இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததால் நடிகர் சூர்யா சில நாட்கள் கழித்து அவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆனால் நடிகர் விஜய் சித்திக் மறைவுக்கு எந்தவித இடங்களும் தெரிவிக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகர் சித்திக்கின் குடும்பத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்ததன் காரணமாக அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி அவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.