LATEST NEWS
செல்வராகவன் இயக்கத்தில் டாப் 2 ஹீரோ காம்பினேஷன்.. வேற லெவல்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகர்..!!

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் பரத். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பால் பல நல்ல திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றார். இவர் இறுதியாக தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமான லவ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன்னை இத்தனை ஆண்டுகளாக கைவிடாமல் உத்வேகம் அளித்து வந்த தன்னுடைய ரசிகர்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி என கண்கலங்கியபடி பேசினார். மேலும் இவர் சுவாரஸ்யமான ஒரு தகவலையும் பகிர்ந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் உடைய இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த ஒரு திரைப்படத்தில் அவரும் நடிக்க ஒப்பந்தமானதாக கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் சென்றதால் அந்த படம் தனக்கு கிடைத்திருந்தால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அது மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கும் என பரத் கூறினார். அது மட்டுமல்லாமல் அஜித் மற்றும் தனுஷ் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்கும் எனவும் பரத் கூறியுள்ளார்.