LATEST NEWS
“தலைவர் 170” படத்தின் டைட்டில் இது தானா?… பெயரே வெறித்தனமா இருக்கே.. ரஜினி ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு கிளம்பிவிட்டார். சுமார் நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு இமயமலை செல்லும் ரஜினி இப்போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்.
தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி அதற்கு அடுத்தபடியாக தற்போது ராஞ்சிக்கு சென்றுள்ளார். இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பியதும் ஜெய்லர் திரைப்பட வெற்றி விழாவை கொண்டாட உள்ளார். அதன் பிறகு ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தலைவர் 170 படத்தின் டைட்டில் லீக் ஆகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு வேட்டையன் என பேரிடப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகின்றது. இதில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள நிலையில் ரௌடிகளை வேட்டையாடும் கதாபாத்திரம் என்பதால் இதற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
