காதலருடன் பாவாடை தாவணியில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்….. வைரலாகும் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலருடன் பாவாடை தாவணியில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்….. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார்.

Advertisement

 

இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

Advertisement

அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜான்வி 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்திலும் ஜான்வி ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்பதால் இதற்காக பிரத்தியேகமாக கிரிக்கெட் பயிற்சியும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் கூட சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இவரைப் போலவே இவரின் தங்கை குஷி கபூரும் விரைவில் ஹீரோயினியாக களமிறங்குகிறார்.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூரும் அவரின் தங்கையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.

Advertisement

இருவரும் பாவாடை தாவணி அணிந்து சுவாமி தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவர்களுடன் ஜான்வி கபூரின் காதலன் ஷிகார் பஹாரியாவும் உடன் இருந்துள்ளார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அதற்காக தனது காதலியுடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in