LATEST NEWS
டாப் நடிகைகளை ஓரம் கட்டிய ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி…. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் .
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை பட குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஆர்த்தி ரவி அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
