LATEST NEWS
திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிய ஜீவா…. இனி அவருக்கு பதில் நடிக்க போவது இந்த நடிகரா..??
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி மற்றும் கூட்டு குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சீரியலில் அண்ணன் தம்பி பிரிவுகள் நிகழ அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கதிர் மற்றும் முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியால் குடும்பம் இணையும் என எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்தடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
கதையில் ஐஸ்வர்யா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கண்ணன் சில உதவிக்காக கதிரை தொடர்பு கொள்ள ஒரு எமோஷனல் எபிசோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரடர்ன் தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற தொடரில் சில காட்சிகளில் நடித்த சஞ்சீவ் திடீரென சீரியலை விட்டு விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து இவர் விலக இவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடர் புகழ் அருண் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
