திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் இப்படியா?…. நயன்தாராவை அந்த விஷயத்தில் முந்திய ஹன்சிகா…. என்ன தெரியுமா?…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் இப்படியா?…. நயன்தாராவை அந்த விஷயத்தில் முந்திய ஹன்சிகா…. என்ன தெரியுமா?…!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் முதன் முதலாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் சட்டென உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனார். அதன் பிறகு உடல் பயிற்சி செய்து படு ஒல்லியாக மாறிய நிலையில் கடந்த வருடம் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனிடையே நடிகை நயன்தாரா 25 கோடிக்கு ஆசைப்பட்டு தனது திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றது போல ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை விற்றுள்ளார். அதாவது டிஸ்டி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் ஹன்சிகாவின் திருமண வைபோக நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருமணம் ஆகி கிட்டதட்ட ஏழு மாதங்கள் முடிந்தும் நயன்தாராவின் திருமண வீடியோ இன்னும் வெளியாகாத நிலையில் இந்த விஷயத்தில் ஹன்சிகா நயன்தாராவை முந்திவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in