LATEST NEWS
தமிழ் சினிமாவில் பல ஸ்டார்களை உருவாக்கிய இவருக்கே இப்படி ஒரு நிலைமையா?…. தனியாக வாழும் முக்கிய சினிமா பிரபலம்….!!!!
தென்னிந்திய சினிமாவில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் தான் கேகே ரத்தினம். இவரை ஜுடோ ரத்தினம் என்று தான் பலரும் அழைப்பார்கள். இவர் முதன்முதலாக கடந்த 1959 ஆம் ஆண்டு தாமரை குளம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற தொடங்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய இவர் இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் பொன்னம்பலம், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல பிரபலங்களை உருவாக்கிய பெருமை இவருக்கே சேரும். 92 வயதான இவர் மூன்று மாடி குடியிருப்பில் தற்போது தனியாக வசித்து வருகின்றார். இப்படி பல பிரபலங்களை உருவாக்கிய இவரை இன்று சினிமா துறையினர் யாருமே கண்டு கொள்வதில்லை. அவரின் தற்போதைய ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
