சென்னை மாநகர போக்குவரத்தில் புதிய அதிரடி….! 500 மின்சார பஸ் டெண்டர் காலி… முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சென்னை மாநகர போக்குவரத்தில் புதிய அதிரடி….! 500 மின்சார பஸ் டெண்டர் காலி… முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

Published

on

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அவசர அவசரமாகக் கோரப்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுப்பணி மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் விதிகளுக்குப் புறம்பாகக் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கோரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களைப் புதிய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அந்த வரிசையில், ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காகக் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ஒப்பந்தப் புள்ளியையும் தவெக அரசு தற்போது முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய நடைமுறையின் கீழ் 625 பேருந்துகளைத் தனியார் பங்களிப்போடு இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே புதிய பேருந்துகளை வாங்கி, தங்களது சொந்தப் பொறுப்பில் இயக்கிப் பராமரிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும்.

Advertisement

அரசுத் தரப்பில் நடத்துனர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்றும், கிலோமீட்டர் கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணத்தைத் தனியார் நிறுவனங்களுக்குப் போக்குவரத்துத்துறை வழங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் போதிய நிதி இல்லாத காரணத்தினாலேயே, இத்தகைய புதிய பொது-தனியார் கூட்டு முறைக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகத் துறைச் சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in