LATEST NEWS
இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?…. புகைப்படம் உள்ளே…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.
தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறி உள்ளார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.
