LATEST NEWS
கலக்கப்போவது யாரு நவீனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிரபலங்கள் பலரும் உள்ளனர்.
விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.
அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நவீன்.
இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசத்தலான காமெடி திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் புகழின் உச்சத்தை தொட்டவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
விஜய் டிவியில் சாதாரண போட்டியாளராக அறிமுகமான இவர் இன்று அதே சேனலில் சீரியல் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இப்படி திரைத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் திடீரென அவரின் மனைவி கொடுத்த புகாரில் இவரின் விவகாரம் காவல்துறை வரை சென்றது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நவீன் காதல் மட்டும் தான் திருமணம் ஆகவில்லை எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு கடந்த வருடம் தான் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கலக்கப்போவது யாரு நவீனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
