ஜெயிலர் வெற்றியை கொண்டாட ரஜினிக்கு பல கோடி மதிப்புள்ள BMW X7 காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

ஜெயிலர் வெற்றியை கொண்டாட ரஜினிக்கு பல கோடி மதிப்புள்ள BMW X7 காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது. இந்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினியை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நேரில் சந்தித்து 100 கோடி மதிப்பிலான செக் ஒன்றை கொடுத்துள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிக்கு கலாநிதி மாறன் ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை 1.25 கோடி என கூறப்படும் நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in