VIDEOS
தொடங்கியது திருமண கொண்டாட்டம்… மாமியார் வீட்டு நலங்கு… வீடியோ வெளியிட்ட நாஞ்சில் விஜயன்…!!

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு மற்றும் சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தனது காமெடியால் மக்களை வெகுவாக கவர்ந்தவர். அதே சமயம் இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அசத்துவதை ரசிக்காத ரசிகர்களை கிடையாது. குறிப்பாக இவரும் ராமரும் சேர்ந்து சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நாசியில் விஜய் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது அவருக்கு திருமண சடங்குகள் தொடங்கியுள்ளது. அது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க